Home இந்தியா மேற்கு வங்காளம் : மம்தா பானர்ஜி சொந்தத் தொகுதியில் தோல்வி

மேற்கு வங்காளம் : மம்தா பானர்ஜி சொந்தத் தொகுதியில் தோல்வி

667
0
SHARE
Ad

கொல்கத்தா : மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் இதுவரையில் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளிலும், பாஜக 77 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

இருப்பினும் அதிர்ச்சி தரும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காளத்தின் நடப்பு முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அவரது சொந்த நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்திருக்கிறார்.

இருப்பினும் அந்தத் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நடத்தப்பட வேண்டுமென மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்காள முதல்வராவாரா அல்லது வேறொருவரை முதல்வராக தனது திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பரிந்துரைப்பாரா என்பது இன்னும் தெரியவில்லை.