Home இந்தியா தமிழ் நாடு : கோவில்பட்டி – கடம்பூர் ராஜூ வெற்றி; டிடிவி தினகரன் தோல்வி

தமிழ் நாடு : கோவில்பட்டி – கடம்பூர் ராஜூ வெற்றி; டிடிவி தினகரன் தோல்வி

756
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியத் தொகுதி கோவில்பட்டி. அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து இங்கு போட்டியிட்டார் அமமுக தலைவர் டிடிவி.தினகரன்.

இருப்பினும் இந்தத் தொகுதியில் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு 22,769 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. டிடிவி தினகரனுக்கு 21,690 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கே.சீனிவாசன் 8,604 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

அமமுக போட்டியிட்ட தொகுதிகளில் எதுவுமே வெற்றி பெறவில்லை. தற்போது டிடிவி தினகரனும் தோல்வியடைந்திருப்பது அந்தக் கட்சியின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியிருக்கிறது.