Home இந்தியா ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின்

ஆளுநரை சந்தித்த மு.க.ஸ்டாலின்

569
0
SHARE
Ad

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை இன்று சந்தித்தார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மு.க.ஸ்டாலின் அளித்தார்.

சட்டமன்றத் தேர்தலில் திமுக மட்டுமே 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 133 சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் கூடி திமுக சட்டமன்றத் தலைவராக மு.க.ஸ்டாலினை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

#TamilSchoolmychoice

இன்று மாலை ஆளுநர் மு.க.ஸ்டாலினை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க உள்ளார். அதன்பின்னர் எந்தெந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற பட்டியலும் ஆளுநரிடம் வழங்கப்படும்.

அதன் பின்னர் ஆளுநர் அமைச்சரவை பட்டியலை வெளியிடுவார்.