Home நாடு மொத்தம் 178,000 பேர் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெறுகிறார்கள்

மொத்தம் 178,000 பேர் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெறுகிறார்கள்

412
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உலக வணிக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில், மொத்தம் 178,000 தடுப்பூசி பெறுநர்கள் இன்று புதன்கிழமை அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பெறத் தொடங்குவார்கள்.

உலக வணிக மையத்தின் நிர்வாக இயக்குனர், டாக்டர் இர்மோஹிசாம் இப்ராகிம் கூறுகையில், புதன்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், மறுநாள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இது தொடரும் என்று கூறினார்.

“எல்லாம் சீராக நடைபெற வேண்டும் என்றும், முழு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி குழு சிறப்பாக இயங்க வேண்டும் என்றும் நான் பிரார்த்திக்கிறேன்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.