Home நாடு சிலாங்கூர்: மே 6 முதல் பள்ளிகள் அடைப்பு

சிலாங்கூர்: மே 6 முதல் பள்ளிகள் அடைப்பு

489
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை மற்றும் வெள்ளிக்கிழமை மூடுமாறு மாநில கல்வித் துறை கூறியுள்ளது. நோன்பு பெருநாள் பள்ளி விடுமுறைகள் திங்கட்கிழமை தொடங்குகின்றன.

உலு லங்காட், பெட்டாலிங், கோம்பாக், கிள்ளான், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை விதிக்க மத்திய அரசின் முடிவை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து சமூகத்தில் இயக்கத்தைக் குறைப்பதற்கான ஒரு முயற்சி இது என்று சிலாங்கூர் கல்வி இயக்குநர் இஸ்மி இஸ்மாயில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நோன்பு பெருநாள் பள்ளி விடுமுறை நாட்கள் வரை பள்ளி மூடல்கள் தொடரும் என்றும், உறைவிடப் பள்ளிகளில் இருப்பவர்கள் கால அட்டவணையின்படி வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த வழிமுறைகளை கவனத்தில் கொண்டு, ஆசிரியர்கள் வீட்டிலிருந்து கற்கும் திட்டத்தை செயல்படுத்த அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் இஸ்மி அறிவுறுத்தினார்.

அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் அனைத்து பள்ளிகளும் இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.