Home நாடு சிலாங்கூர்: மே 8 முதல் ரமலான் சந்தைகளுக்கு அனுமதி இல்லை

சிலாங்கூர்: மே 8 முதல் ரமலான் சந்தைகளுக்கு அனுமதி இல்லை

447
0
SHARE
Ad

ஷா ஆலாம்: சனிக்கிழமை முதல் சிலாங்கூரில் ரமலான் சந்தைகள் அனுமதிக்கப்படாது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறியுள்ளார். இருப்பினும், வழிபாட்டு இல்லங்கள் மற்றும் மழலையர் பள்ளி எப்போதும் போல திறந்திருக்கும் என்று அவர் கூறினார்.

சிலாங்கூரில் ஆறு மாவட்டங்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் நாளை தொடங்கி வைக்கப்படுவதால் , ரமலான் சந்தைகள் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆயினும், இரண்டு நாட்களுக்கு அது செயல்பட அனுமதிக்கப்படும்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு சந்தை மூடுவதையும், நோன்பு பெருநாள் கொண்டாட்டங்களுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் வர்த்தகர்களின் நலன்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாக செய்தியாளர் கூட்டத்தில் அமிருடின் விளக்கினார்.

#TamilSchoolmychoice

“சனிக்கிழமையோடு அவர்கள் 25 நாட்களுக்கு வர்த்தகம் செய்திருப்பார்கள். இப்போது சந்தையை மூடினால் அது மிகவும் பாதகமாக இருக்காது. ” என்று அவர் கூறினார்.