Home உலகம் ஜூலை 4-க்குள் 70 விழுக்காடு அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்

ஜூலை 4-க்குள் 70 விழுக்காடு அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்

752
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூலை 4- ஆம் தேதிக்குள் 70 விழுக்காடு அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளார். மேலும், விரைவில் 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் திட்டத்தையும் கொண்டுள்ளார்.

சுதந்திர தினத்தன்று 160 மில்லியன் அமெரிக்கர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டுவதாக அவர் எண்ணுகிறார்.

105 மில்லியன் மக்களுக்கு ஏற்கனவே கொவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன. அமெரிக்கா ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்துகிறது.

#TamilSchoolmychoice

திங்களன்று வெள்ளை மாளிகையில் பெசிய பைடன்: “இரண்டு மாதங்களில் தேசமாக சுதந்திரத்தையும் இந்த தொற்றிலிருந்து நமது சுதந்திரத்தையும் கொண்டாடுவோம். இதை நாம் செய்ய முடியும், இதை நாங்கள் செய்வோம்.” என்று கூறியிருந்தார்.