Home நாடு கோலாலம்பூரில் ரமலான் சந்தைகளுக்கு அனுமதி

கோலாலம்பூரில் ரமலான் சந்தைகளுக்கு அனுமதி

505
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள ரமலான் சந்தைகள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அனுவார், அனுமதிக்கப்பட்ட வணிக நேரம் தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை என்றும் நோன்பு பெருநாள் வரை அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார்.

நோன்பு பெருநாள் கடைகள் தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.