Home நாடு ரெலா உறுப்பினரை மோத முயன்ற கார் ஓட்டுனர் மீது புகார்!

ரெலா உறுப்பினரை மோத முயன்ற கார் ஓட்டுனர் மீது புகார்!

402
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ரெலா உறுப்பினர் ஒருவரை பி.எம்.டபிள்யூ கார் ஒன்று மோத முயன்றதாக அந்நபர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

எஸ்.ஜனகன் எனும் அவர், போக்குவரத்தை கட்டுப்படுத்தும் கடமையில் இருந்தபோது நேற்று மாலை 5.20 மணியளவில் ஷா ஆலாமில் கோத்தா கெமுனிங் இடைநிலைப்பள்ளி அருகே இருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றார்.

“திடீரென்று ஒரு இருண்ட பி.எம்.டபிள்யூ கார் எதிர் பாதையில் நுழைந்தது. நான் காரை ஒரு வழி பாதையில் நுழைவதைத் தடுத்தேன், ஆனால் வாகனத்தின் ஓட்டுனர் என்னை பல முறை மோத முயன்றார்.

#TamilSchoolmychoice

“நான் ஓட்டுனரைத் திரும்பிச் செல்லச் சொன்னேன், ஆனால் அவர் இன்னும் பிடிவாதமாக இருந்தார்,” என்று அவர் கூறினார்.