Home நாடு கொவிட்-19: நடைமுறையை மீறியதால் நஜிப்புக்கு 3,000 ரிங்கிட் அபராதம்

கொவிட்-19: நடைமுறையை மீறியதால் நஜிப்புக்கு 3,000 ரிங்கிட் அபராதம்

366
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இரண்டு மாதங்களுக்கு முன்பு கோலாலம்பூரில் ஓர் உணவகத்திற்குள் செல்வதற்கு முன்பு கொவிட் -19 நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறியதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு மொத்தம் 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு குற்றங்களுக்காக அவருக்கு தலா 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது அவரது உடல் வெப்பநிலையை எடுக்கத் தவறியது மற்றும் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு மைசெஜாதெரா வழியாக பதிவுசெய்யாததற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கிடையில், கடையின் உரிமையாளருக்கு தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 (சட்டம் 342) இன் கீழ் 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

முன்னதாக, நஜிப் தான் தவறு செய்ததாகவும், அபராதம் செலுத்துவதாகவும் ஒப்புக் கொண்டார்.