Home நாடு மே 7 முதல் கோலாலம்பூரில், ஜோகூர்- பேராக் சில பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

மே 7 முதல் கோலாலம்பூரில், ஜோகூர்- பேராக் சில பகுதிகளில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

493
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர் மற்றும் ஜோகூர், பேராக்கில் சில பகுதிகளிலும் திரெங்கானுவில் உள்ள பல மாவட்டங்கள் முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை செயல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

இது மே 7 முதல் மே 20 வரை நடைமுறையில் இருக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 27 வரை, கோலாலம்பூர் முழுவதும் மொத்தம் 17 புதிய தொற்றுக் குழுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. தினசரி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த முறை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை, முன்பு அறிவிக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு ஏற்ப இருக்கும் என்று இஸ்மாயில் கூறினார்.