Home இந்தியா பி.1.617 பிறழ்வு இந்தியாவில் அதிக சம்பவங்களை ஏற்படுத்தியுள்ளது

பி.1.617 பிறழ்வு இந்தியாவில் அதிக சம்பவங்களை ஏற்படுத்தியுள்ளது

431
0
SHARE
Ad

புது டில்லி: மார்ச் மாதத்தில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 தொற்றின் இரட்டை பிறழ்வு கொடிய இரண்டாவது அலையை ஏற்படுத்தி இருக்கலாம் என்று இந்தியா கூறியுள்ளது.

பிறழ்வு பி .1.617 பல மாநிலங்களில் உயர் சம்பவங்களுக்கு வித்திட்டுள்ளன.

எவ்வாறாயினும், அவர்களால் ஒரு தொடர்பை முழுமையாக நிறுவ முடியவில்லை என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், புதன்கிழமை 24 மணி நேர இடைவெளியில் இந்தியா 412,000 சம்பவங்களையும், 3,980 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்ட விஞ்ஞான ஆலோசகரும் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்று எச்சரித்தார்.