Home உலகம் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலன் வெற்றிகரமாகப் பறந்து தரையிறக்கப்பட்டது

ஸ்பேஸ்எக்ஸ் விண்கலன் வெற்றிகரமாகப் பறந்து தரையிறக்கப்பட்டது

464
0
SHARE
Ad

கலிபோர்னியா: படிப்படியாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறது.

சமீபத்திய முன்மாதிரியான எண் 15 (எஸ்.என் 15) விண்கலன், வெற்றிகரமாக உயரமாகப் பறந்து மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.

முந்தைய நான்கு சோதனைகளில் சிக்கல் ஏற்பட்டு அவை வெடித்து சிதறின. ஆனால், எஸ்.என் 15- க்கு அத்தகைபும் காட்சி படமாக்கப்பட்டுள்லது.

#TamilSchoolmychoice

தரையிறக்கத்தின் போது, அடிப்பகுதியைச் சுற்றி ஒரு சிறிய தீ காணப்படது, ஆனால் விரைவில் அது அணைக்கப்பட்டது.

அமெரிக்க விண்வெளி நிறுவனம் (நாசா) இந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்க தேர்வு செய்துள்ளதால், இப்போது ஸ்டார்ஷிப் திட்டத்தில் அது கணிசமான ஆர்வம் காட்டி வருகிறது.