Home நாடு பெட்டாலிங் ஜெயாவில் 4 சாலைத் தடுப்புகள் பராமரிக்கப்படும்

பெட்டாலிங் ஜெயாவில் 4 சாலைத் தடுப்புகள் பராமரிக்கப்படும்

444
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று முதல் மே 17 வரை சிலாங்கூரில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயாவில் நான்கு சாலைத் தடுப்புகளை காவல் துறை அப்படியே பராமரிக்கும்.

பெட்டாலிங் மாவட்டத்தின் கீழ் உள்ள சுங்கை புலோ, கோத்தா டாமான்சாரா, டாமான்சாரா, மற்றும் சுபாங் ஆகியவற்றின் நெடுஞ்சாலை பகுதிகளில் இந்த நான்கு தடுப்புகளும் உள்ளன.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் முகமட் பக்ருடின் அப்துல் ஹாமிட் கூறுகையில், காவல் துறை தங்கள் அதிகாரிகளை அதிகரிப்பதுடன், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்குவதை கண்காணிக்க பெட்டாலிங் ஜெயா நகராட்சியுடன் ஒத்துழைப்பார்கள் என்று கூறினார்.