Home நாடு “உயிர் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டாடுவோம்” – வேதமூர்த்தி நோன்புப் பெருநாள் வாழ்த்து

“உயிர் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டாடுவோம்” – வேதமூர்த்தி நோன்புப் பெருநாள் வாழ்த்து

861
0
SHARE
Ad

மலேசிய முன்னேற்றக் கட்சியின் தேசியத் தலைவரும், ஒற்றுமைத்துறையின் முன்னாள் அமைச்சரும், செனட்டருமான மாண்புமிகு பொன்.வேதமூர்த்தியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

அனைவருக்கும் நோன்புத் திருநாள் வாழ்த்துகள்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டுடன் நோன்புத் திருநாளைக் கொண்டாட வேண்டிய இக்கட்டான நிலைக்கு இஸ்லாமியப் பெருமக்கள் ஆளாகி உள்ளனர். பொருளாதார மந்த நிலையுடன் வேலை இழப்பினால் வருமான பாதிப்புக்கும் நாட்டு மக்கள் ஆளாகி உள்ள இந்த வேளையில், கொரோனா தாக்கம் உலக நாடுகளைப் போல மலேசியாவிலும் பரவலாக ஏற்பட்டுள்ளது. இதனால், தேசிய அளவில் நடமாட்டக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் நாட்டில் ஏற்பட்டு உள்ளது.

இதனை மக்களும் ஏற்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது. முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை முக்கியமான இந்த விழாவின்போது உற்றார் உறவினரை சந்திக்க முடியாத நிலையில் தத்தம் இல்லத்திலேயே கொண்டாட வேண்டி இருக்கிறது. தவிர, பண்டிகைக் காலத்தின்போது, அரசும் மக்களும் வழக்கமாக அனுசரிக்கும் பொது உபசரிப்பு என்னும் பாரம்பரிய பண்பாட்டையும் ஒருங்கிணைப்பு ஒன்றுகூடலையும் துறக்க வேண்டி உள்ளது.

#TamilSchoolmychoice

உயிர்ப் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால், மக்களும் இந்த நெருக்கடியை உணர்ந்துள்ளனர். எனவே வாழ்த்துகளை சமூக ஊடகங்களின் மூலம் பகிர்ந்து கொண்டு அனைவரும் தத்தம் இல்லத்திலேயே இந்த ரமடான் மாத நிறைவை பாரம்பரிய சிறப்புடன் கொண்டாடி மகிழும்படி கேட்டுக் கொள்வதாக மலேசிய முன்னேற்றக் கட்சியின் தேசியத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள நோன்புத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.