கோலாலம்பூர் : இன்று வெள்ளிக்கிழமை (மே 14) வரையிலான ஒருநாளில் கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து 4 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாயின.
புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 4,113 ஆக இருந்த வேளையில் 34 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இதற்கு முன்னர் ஜனவரி 31-ஆம் தேதி 5,298 தொற்றுகள் பதிவாயின. இதுவே மலேசிய வரலாற்றில் மிக அதிகபட்ச தொற்றுகளின் எண்ணிக்கையாகும்.
கடந்த ஒரு வார காலத்தில் தொடர்ந்து 5-வது முறையாக தொற்றுகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியிருக்கின்றது.
4,113 புதிய தொற்றுகளில் ஒரு தொற்று மட்டுமே வெளிநாட்டிலிருந்து பெறப்பட்டதாகும். மற்ற 4,112 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும்.
நேற்றைய புதிய தொற்றுகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 462,190 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 4,190 ஆக இருந்தது. இதனைத் தொடர்ந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 418,897 ஆக உயர்ந்தது.
மரண எண்ணிக்கை 34 ஆக பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 1,822 ஆக உயர்ந்திருக்கிறது.
தற்போது நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 41,471 ஆகும். இவர்களில் 482 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 250 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
மாநில ரீதியில் 1,269 தொற்றுகளோடு சிலாங்கூர் முதல் இடத்தில் இருக்கிறது.
மாநில வாரியான தொற்றுகளின் எண்ணிக்கை பின்வருமாறு:
சிலாங்கூர் (1,269)
கோலாலம்பூர் (306)
ஜோகூர் (335)
பினாங்கு (266)
சரவாக் (533)
கிளந்தான் (371)
பேராக் (302)
கெடா (193)
திரெங்கானு (165)
நெகிரி செம்பிலான் (124)
சபா (53)
மலாக்கா (107)
பகாங் (178)
புத்ரா ஜெயா (20)
லாபுவான் (6)
பெர்லிஸ் (5)