Home கலை உலகம் கொவிட்-19: நடிகர் நிதிஷ் வீரா காலமானார்

கொவிட்-19: நடிகர் நிதிஷ் வீரா காலமானார்

507
0
SHARE
Ad

சென்னை: புதுப்பேட்டை, காலா போன்ற திரைப்படத்தில் நடத்த நடிகர் நிதிஷ் வீரா கொவிட்-19 தொற்று காரணமாக காலமானார். இந்தியாவில் கொவிட்-19 தொற்றின் இரண்டாம் அலையில் பலர் பாதிக்கப்பட்டு மாண்டு வருகின்றனர்.

கொவிட்-19 தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டாம் அலையில் தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து இழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

கொவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிதிஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 45.

#TamilSchoolmychoice

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் அவர் பிரபலமானார்.