Home கலை உலகம் கட்டுப்பாட்டு ஆணை விதி மீறல்: உள்ளூர் தமிழ் திரைப்பட இயக்குனருக்கு அபராதம்

கட்டுப்பாட்டு ஆணை விதி மீறல்: உள்ளூர் தமிழ் திரைப்பட இயக்குனருக்கு அபராதம்

541
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைமையை மீறியதற்காக உள்ளூர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிரம்பானுக்கு அருகிலுள்ள ஜெத்தி பெனாம்பாங் 2, புக்கிட் பெலாண்டோக்கில் உள்ள பொது இடத்தில் படப்பிடிப்பை அவர் மேற்கொண்டார்.

காலை 11.30 மணியளவில் இப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததையடுத்து, 59 வயதான நபருக்கு எதிரான அபராதம் விதிக்கப்பட்டதாக போர்ட் டிக்சன் காவல்துறைத் தலைவர் ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஜெத்தியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அந்த நபருக்கு காவல்துறை அபராதம் வழங்கியது.

“தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்த நடைமுறைகளுக்கு தனிநபர்கள் அதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும். நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தில் படபிடிப்புத் தளங்களில் மட்டுமே படப்பிடிப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.