அவரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.
அவரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தென் தமிழகத்திற்கே உரிய கரிசல் காட்டு மொழி நடையில் பல நாவல்களையும் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் படைத்தவர் கி.ரா.
அவரின் கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் என்ற இரு நாவல்கள் அவரின் கிராமத்து எழுத்து நடைக்கு பெருமை சேர்த்தவையாகும். கோபல்லபுரத்து மக்கள் நாவல் சாகித்திய அகாடமி விருதையும் கி.ராவுக்குப் பெற்றுத் தந்தது.
கரிசல் காட்டு கடுதாசி என்ற கட்டுரைத் தொடரையும் அவர் தனக்கே உரிய கிராமத்து பேச்சு வழக்கில் படைத்தார்.