Home நாடு கொவிட்-19: தீவிர சிகிச்சைப் பிரிவின் படுக்கை பயன்பாடு 125 விழுக்காட்டை எட்டியது

கொவிட்-19: தீவிர சிகிச்சைப் பிரிவின் படுக்கை பயன்பாடு 125 விழுக்காட்டை எட்டியது

576
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கில் கொவிட்-19 நோயாளிகளின் தீவிர சிகிச்சைப் பிரிவின் படுக்கை பயன்பாட்டு விகிதம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 125 விழுக்காட்டை எட்டியுள்ளது.

நாடு முழுவதும் கொவிட்-19 நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் ஒட்டுமொத்த வீதம் 74 விழுக்காட்டை எட்டியுள்ளது.

இதற்கிடையில், சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, கெடா, சரவாக், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களின் படுக்கைகளின் பயன்பாட்டை 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக பதிவு செய்துள்ளன.

#TamilSchoolmychoice

“கொவிட்-19 மருத்துவமனைகள் சாதாரண நோயாளிகளின் அறையை மாற்றி கொவிட்-19 நோயாளிகளின் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. இருப்பினும், இது கொவிட்-19 அல்லாத நோயாளிகளுக்குத் தேவையான முக்கியமான கவனிப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. .

“சமீபத்திய சம்பவங்களின் அதிகரிப்பு நாட்டின் சுகாதார சேவை முறைக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று புதன்கிழமை தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்தார்.

எனவே, வெளியில் முக்கியமான வேலை எதுவும் இல்லையென்றால் மலேசியர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கேட்டுக்கொண்டார்.