Home உலகம் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் 61 குழந்தைகள் உட்பட 212 பேர் மரணம்

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் 61 குழந்தைகள் உட்பட 212 பேர் மரணம்

960
0
SHARE
Ad

காசா: இஸ்ரேலிய சியோனிச ஆட்சியின் வன்முறை அச்சுறுத்தலில் காசா பகுதியில் மொத்தம் இரண்டு மில்லியன் பொதுமக்கள் சிக்கியுள்ளனர்.

காசாவில் மின்சாரம் வழங்கும் நிறுவனங்களும் அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் எரிபொருள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சண்டை மற்றும் வான்வழித் தாக்குதலினால் மின் பரிமாற்ற இணைப்புகளை சேதப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் பள்ளி வீடற்ற குடும்பங்களுக்கான தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நடந்துகொண்டிருக்கும் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து வீட்டிற்கு திரும்புவதற்கு அவர்கள் மிகவும் பயப்படுவதால் சிலர் பள்ளிகளில் தங்கி உள்ளனர்.

இதுவரை, 61 குழந்தைகள் மற்றும் 36 பெண்கள் உட்பட குறைந்தது 212 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதில் 1,500- க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.