Home நாடு பிபிஎஸ், ஜிஆர்எஸ் கூட்டணியுடன் நிலைத்திருக்கும் – அம்னோ

பிபிஎஸ், ஜிஆர்எஸ் கூட்டணியுடன் நிலைத்திருக்கும் – அம்னோ

833
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: காபுங்கான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) கூட்டணியிலிருந்து, பிபிஎஸ் வெளியேறி எதிர்க்கட்சியான வாரிசானுடன் இணையும் என்ற ஊகங்களை சபா அம்னோ நிராகரித்தது.

சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் இந்த ஊகத்தை ஆதாரமற்றது என்று கூறினார். கடந்த ஆண்டு மாநிலத் தேர்தலில் ஜிஆர்எஸ்-க்கு வாக்காளர்கள் வழங்கிய ஆணையை பிபிஎஸ் நிராகரிக்காது என்று அவர் நம்புகிறார்.

“ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க வாரிசான் மற்றும் பிபிஎஸ் இணைந்து செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டு குறித்து தனிப்பட்ட முறையில் என்னிடம் துல்லியமான தகவல்கள் இல்லை.

#TamilSchoolmychoice

“எனக்கு எதுவாக இருந்தாலும், இந்த பிரச்சனைக்கு எந்த அடிப்படையும் இல்லை, ஏனென்றால் கடந்த தேர்தலில் ஒன்றாக உருவாக்கப்பட்ட ஜிஆர்எஸ் அரசாங்கத்தை பிபிஎஸ் நிராகரிக்கும் என்று நான் நம்பமுடியவில்லை,” என்று கடந்த திங்கட்கிழமை மலேசியாகினியிடம் புங் மொக்தார் கூறினார்.

மே 11 அன்று, வாரிசான் தலைவர் முகமட் ஷாபி அப்தால், வாய்ப்பு வழங்கப்பட்டால், தனது கட்சி பிபிஎஸ் உடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார்.