Home நாடு முழு நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு சிலாங்கூர் எதிர்ப்பு

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு சிலாங்கூர் எதிர்ப்பு

718
0
SHARE
Ad

ஷா ஆலாம்: கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை போலவே, மாநிலத்தில் முழுமையான கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

சிலாங்கூர் கொவிட் -19 பணிக்குழுவின் தலைவர் சுல்கிப்ளி அகமட் கூறுகையில், கொவிட் -19 நிலைமையை இன்னும் சிறப்பாக நிர்வகித்து வருவதாகவும், அதன் தொற்று விகிதம் கிளந்தான் மற்றும் பகாங்கை விட குறைவாக இருப்பதாகவும் கூறினார்.

இந்த வார தொடக்கத்தில், சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா, கொவிட் -19 பரவுவதைத் தடுக்க அரசு தவறினால், கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை அல்லது சிலாங்கூரில் முழு அளவிலான கட்டுப்பாட்டை அமல்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருவதாகக் கூறியிருந்தார்.