Home நாடு இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை நிறுத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை நிறுத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

848
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை நிறுத்தக் கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மனுவை அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்புவார்கள் என்று நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் தெரிவித்தனர்.

இன்று ஒரு மெய்நிகர் சந்திப்பில் பேசிய பிகேஆர் நாடாளுமன்ர உறுப்பினர் சைட் இப்ராகிம் சைட் நோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஒரு மெய்நிகர் தளம் மூலம் மனுவை சமர்ப்பிக்க திட்டமிட்டிருந்தனர், ஆனால், அதனை தூதரகம் நிராகரித்ததாகக் கூறினார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக எங்களால் அதன நேரடியாக் ஒப்படைக்க முடியாது. எனவே, இந்த இயங்கலை சந்திப்பு அவர்களுக்கு அடையாளமாக வழங்கப்படுகிறது, ” என்று சைட் இப்ராகிம் கூறினார்.

#TamilSchoolmychoice

ஜெருசேலம், காசா, மேற்குக் கரை மற்றும் பிற ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களை தூதரகம் கண்டித்து நிறுத்த வேண்டும் என்று மனு கோருகிறது. இது உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் அனைத்துலக தீர்மானங்களை மீறுகிறது.

“பாலஸ்தீனிய மக்களின் நியாயமான உரிமைகளுக்கு எதிரான இஸ்ரேலிய குற்றங்களுக்கு அமெரிக்காவின் நடவடிக்கைகள் மற்றும் வாஷிங்டனின் அனுமதி கண்டிக்கப்பட வேண்டும்.”

“பாலஸ்தீனிய குழந்தைகளின் மனித உரிமைகளை மீறுவதற்கும், பாலஸ்தீனிய குடும்பங்களின் வீடுகளை இடிப்பதற்கும் அல்லது பாலஸ்தீனிய நிலங்களை நிரந்தரமாக இணைப்பதற்கும் அமெரிக்க உதவி நீண்ட காலமாக இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை,” என்று அவர் கூறினார்.