Home உலகம் சிங்கப்பூர்: மலேசிய மாணவரால் புதிய தொற்று குழு!

சிங்கப்பூர்: மலேசிய மாணவரால் புதிய தொற்று குழு!

547
0
SHARE
Ad

சிங்கப்பூர்: ஏழு வயது மலேசிய மாணவர் சிங்கப்பூரில் ஏற்பட்ட ஒரு தொற்று குழுவுடன் இணைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அக்குடியரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடைசியாக யுஹுவா தொடக்கப்பள்ளி மாணவர் பள்ளிக்குச் சென்றது மே 14 அன்று என்று அமைச்சகம் நேற்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அம்மாணவரின் குடும்ப உறுப்பினர், ஸ்பிரிங் கோர்ட் உணவகத்தில் பணிப்புரியும் 36 வயது மலேசிய சமையல்காரரும் அதே தொற்று குழுவுடன் இணைக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், சாங்கி விமான நிலைய 3 தொற்று குழுவுடன் மேலும் இரண்டு மலேசியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதில் 87 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அவர்களில் ஒருவர் 36 வயதான மலேசிய பெண். ஆரம்பத்தில் அவர் பி.1.617 பிறழ்வுக்கு நேர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டார். மேலும், உறுதிப்படுத்தல் சோதனைகளுக்கு அவர் காத்திருக்கிறார்.