Home நாடு கொவிட்-19: தீபகற்ப மலேசியாவில் பச்சை மண்டலங்கள் இல்லை

கொவிட்-19: தீபகற்ப மலேசியாவில் பச்சை மண்டலங்கள் இல்லை

528
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மே மாத தொடக்கத்தில் இருந்து புதிய கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தீபகற்ப மலேசியாவின் மாநில மாவட்டங்களில் பச்சை மண்டலங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

10 மாவட்டங்கள் மஞ்சள் மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது பெர்லிஸில் கங்கார்; கெடாவில் பாடாங் தெராப் மற்றும் சிக்; கிளந்தானில் குவா முசாங்; திரெங்கானுவில் கெமாமான் மற்றும் உலு திரெங்கானு ; பகாங்கில் மாரான் மற்றும் கேமரன் ஹைலேண்ட்ஸ்; ஜோகூரில் மெர்சிங் மற்றும் பேராக்கில் பேராக் தெங்கா ஆகியவை அடங்கும்.

கம்பார், லங்காவி, மாராங், பெரா, லிப்பிஸ், ரோம்பின், ஜெலெபு மற்றும் கோலா பிலா என எட்டு மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

சம்பந்தப்பட்ட மஞ்சள் மற்றும் ஆரஞ்சு மண்டல மாவட்டங்களைத் தவிர, தீபகற்ப மலேசியாவில் உள்ள மற்ற அனைத்து மாவட்டங்களும் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் இன்னும் 13 பச்சை மண்டலங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், சரவாக்கில் ஒன்பதும், சபாவில் 26 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.