Home நாடு 500,000 சினோவாக் தடுப்பூசிகளை சரவாக் சொந்தமாக வாங்கும்

500,000 சினோவாக் தடுப்பூசிகளை சரவாக் சொந்தமாக வாங்கும்

678
0
SHARE
Ad

பிந்துலு: மாநிலத்தில் தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை விரைவுபடுத்தும் முயற்சியில் சரவாக் தனது சொந்த கொவிட் -19 தடுப்பூசியை வாங்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருடனான சந்திப்பில் இதனை கூறியதாக சரவாக் முதல்வர் டத்தோ பாதிங்கி அபாங் ஜோஹாரி துன் ஓபென் கூறினார்.

ஆரம்பத்தில், மாநில அரசு 500,000 சினோவாக் தடுப்பூசியை முதல் கட்டமாக வாங்கும் என்று அபாங் ஜோஹாரி விளக்கினார்.

#TamilSchoolmychoice

“தடுப்பூசி வாங்க சரவாக் அனுமதி கேட்க இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் பிரதமரை சந்தித்தேன். தடுப்பூசியை நாமே வாங்க அனுமதித்தார்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இது தவிர, மாநிலத்தின் தனியார் மருத்துவமனைகளின் சேவைகளை தடுப்பூசி மையங்களாக பயன்படுத்த மத்திய அரசு சரவாக் அனுமதித்ததாகவும் அபாங் ஜோஹாரி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தடுப்பூசி களை வழங்க தனியார் மருத்துவமனைகள் மட்டுமே இதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.