Home நாடு கொவிட்-19: 46 பேர் மரணம்- அதிகமாக 6,075 சம்பவங்கள் பதிவு

கொவிட்-19: 46 பேர் மரணம்- அதிகமாக 6,075 சம்பவங்கள் பதிவு

529
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (மே 19) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை 6,075 -ஆக உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 485,496 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் பதிவான 6,075 தொற்று சம்பவங்களில் 6,072 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 3 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,516 -ஆக பயிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 436,116 ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 47,340 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 559 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 303 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 46-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 2,040 ஆக உயர்ந்திருக்கிறது.

மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மீண்டும் பதிவு செய்தது. 2,251 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. அதனை அடுத்து ஜோகூரில் 699 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 660 சம்பவங்கள் பதிவாகி உள்ள நிலையில், கெடாவில் 445 சம்பவங்களும், கிளந்தானில் 441` சம்பவங்களும் பதிவாகி உள்ளன. சரவாக் 323 சம்பவங்களைப் பதிவு செய்தது.