Home நாடு முக்ரிஸ் உட்பட 8 பேர் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடியதற்கு வாக்குமூலம் அளித்தனர்

முக்ரிஸ் உட்பட 8 பேர் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடியதற்கு வாக்குமூலம் அளித்தனர்

1004
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் மற்றும் ஏழு பேர் இன்று டாங் வாங்கி காவல் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்தனர்.

முக்ரிஸைத் தவிர, முடா தலைமைச் செயலாளர் அமீர் ஹரிரி அப்துல் ஹாடி, கூட்டரசு பிரதேச அமானா இளைஞர் தலைவர் அஸ்மாலிப் அப்துல் அடாம், பெஜுவாங்கின் கைருடின் அபு ஹசான், பாலோ சட்டமன்ற உறுப்பினர் ஷேக் உமர் பாகரிப் அலி, கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வெய், பிஎஸ்எம் கட்சியின் ஷரன் ராஜ், மற்றும் உண்டி18 நிறுவனர் தர்மா பிள்ளை ஆகியோர் அழைக்கப்பட்டனர்.

தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கம் கொவிட் -19 நெருக்கடியைக் கையாளத் தவறிவிட்டது என்றும், இது ஒரு நாளைக்கு 6,000- க்கும் அதிகமான வழக்குகளின் எண்ணிக்கையால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் முக்ரிஸ் கூறினார்.

#TamilSchoolmychoice

“தொற்றைக் கையாள்வதில் அவசரகால நிலை வெற்றி பெறவில்லை என்பதையும் நாம் காணலாம்,” என்று அவர் கூறினார்.

#BukaPuasaParlimen கூட்டம் ஏப்ரல் 30 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பாளர்கள் ஒன்றாக நோன்பு திறப்பதற்கு முன்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.