புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு வருவதை மத்திய அரசு தீவிரமாகப் பார்க்கிறது.
இதனை அடுத்து இந்த காரணமாக ஏற்படும் கருப்பு பூஞ்சையை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தொற்று நோய்கள் சட்டம் 1897- இன் கீழ் கருப்பு பூஞ்சை பாதிப்பும் தொற்று நோய் என அது கூறியுள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 தொற்று பாதிப்பு தீவிரமாக பரவி வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்து வருகிறது. பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.