Home நாடு முழு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டால், ஐ-சினார்- கடன் தள்ளுபடியை அனுமதிக்கவும்

முழு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டால், ஐ-சினார்- கடன் தள்ளுபடியை அனுமதிக்கவும்

483
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை செயல்படுத்த அரசு விரும்பினால், ஐ-சினார் 2.0 மற்றும் ஐ-லெஸ்டாரி 2.0 சேவையை அரசாங்கம் அனுமதிக்கும் என்று அம்னோ இளைஞர் பிரிவு நம்புகின்றது.

“பி40 பிரிவில் உள்ள மக்களுக்கு குறிப்பாக ஒரு நிலையான சம்பளம் இல்லாதவர்கள், சுயதொழில் செய்பவர்கள் அல்லது வருமான ஆதாரங்கள் இல்லாதவர்களுக்கு சிறப்பு உதவி. ஐ-சினார் 2.0 மற்றும் ஐ-லெஸ்டாரி 2.0 அனுமதி, ” என்று அதன் தலைவரான அசிராப் வாஜ்டி டுசுகி இன்று தனது முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்கு கட்டணம் இன்றி கடன் தள்ளுபடியை வழங்க நிதி மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு நேரடி அவசர கட்டளையை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.