Home நாடு கொவிட்-19: அம்னோ நிரந்தர துணை அவைத் தலைவர் காலமானார்

கொவிட்-19: அம்னோ நிரந்தர துணை அவைத் தலைவர் காலமானார்

496
0
SHARE
Ad
படம்: அம்னோ நிரந்தர துணை  அவைத்தலைவர் ரிசுவான் அப்துல் ஹமீட்- பெர்னாமா

கோலாலம்பூர்: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் கொவிட் -19 தொற்று காரணமாக அம்னோ நிரந்தர துணை  அவைத்தலைவர் ரிசுவான் அப்துல் ஹமீட் நேற்று இரவு காலமானார்.

மே 1-ஆம் தேதி பரிசோதனைக்குப் பிறகு ரிசுவானுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக பெர்னாமா கூறியது.

அவரது மனைவி மடினா மொஹமத்தும் அதே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

#TamilSchoolmychoice

கெப்போங் அம்னோ தொகுதித் தலைவரான ரிசுவானின் மரணத்தை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி உறுதிப்படுத்தினார்.