Home நாடு கொவிட்-19: சிலாங்கூர் அரசின் தன்னார்வ பரிசோதனையில் அதிக தொற்றுகள் பதிவு

கொவிட்-19: சிலாங்கூர் அரசின் தன்னார்வ பரிசோதனையில் அதிக தொற்றுகள் பதிவு

487
0
SHARE
Ad

ஷா ஆலாம்: சிலாங்கூர் அரசாங்கத்தின் தன்னார்வ கொவிட் -19 பரிசோதனை முடிவில் இதுவரை 1,171 தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

ஆறு பகுதிகள் ஐந்து விழுக்காடிற்கும் மேலான பரிசோதனை விகிதத்தைக் கொண்டுள்ளன.

போதுமான பரிசோதனைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோல்,  ஐந்து விழுக்காடாகும். சமூகத்தில் கண்டறியப்படாத நேர்மறை கொவிட் -19 சம்பவங்கள் இருப்பதையும், மேலும் சோதனைகள் தேவைப்படுவதையும் இது குறிக்கிறது.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சகம் 10 விழுக்காட்டை இங்கு அடையாளமாக கருதுகிறது.

சிலாங்கூரில் பரிசோதனை மே 8- ஆம் தேதி தொடங்கியது. அதன் பின்னர் கோம்பாக் மற்றும் உலு லங்காட் முழுவதும் 14 தொகுதிகளில் இது மேற்கொள்ளப்பட்டது.

மந்திரி பெசார் அமிருடின் ஷாரி இன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கோம்பாக் செத்தியாவில் (8.24 விழுக்காடு) மிக உயர்ந்த நேர்மறை விகிதம் கண்டறியப்பட்டது. 2,207 பரிசோதனைகளில் இருந்து 167 நேர்மறை சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

காஜாங் இரண்டாவது இடத்தில் (8.08 விழுக்காடு), 1,052 பரிசோதனைகளில் இருந்து 85 சம்பவங்களைக் கண்டுள்ளது.

மூன்றாவது மிக உயர்ந்த விகிதம் உலு கெலாங்கில் (8.06 விழுக்காடு) கண்டறியப்பட்டது. 1,811 பரிசோதனைகளில் இருந்து 146 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஐந்து விழுக்காட்டிற்கும் மேலான சோதனை நேர்மறை விகிதங்களைக் கொண்ட மற்ற மூன்று பகுதிகள் தாமான் டெம்ப்லர் (7.99 விழுக்காடு), புக்கிட் அந்தராபங்சா (7.58 விழுக்காடு), மற்றும் சுங்கை துவா (5.63 விழுக்காடு).

மொத்தத்தில், 19,858 பேர் பரிசோதனைக்கு முன்வந்துள்ளனர்.