Home நாடு ‘நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர மாட்டோம்!’

‘நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர மாட்டோம்!’

599
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஆதரிக்கப்போவதில்லை என்று உத்தரவாதம் அளித்து ஜசெக மீண்டும் நாடாளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கொவிட் -19 விஷயங்களைப் பற்றி விவாதிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகக் கூறினார்.

கொவிட் -19 தொற்றுநோயை சமாளிக்க எட்டு மாத அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஜனவரி 12 முதல் நாடாளுமன்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குப் பிறகு, அரண்மனை நாடாளுமன்றத்தை கூட்டலாம் என்று கூறியது.

#TamilSchoolmychoice

ஜோகூர் கோரியதைப் போலவே, அவசரக் கூட்டத்திற்கு தேசிய கூட்டணி அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று இன்று ஓர் அறிக்கையில் லிம் கூறினார்.

நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கு மாற்றாக கொவிட் -19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து ஜோகூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜோகூர் மாநில அரசு சந்தித்து விவாதிக்க வேண்டும் என்று ஜோகூர் சுல்தான் நேற்று முன்மொழிந்திருந்தார்.