கோலாலம்பூர்: கோலாலம்பூரில் கம்போங் பத்து முடா தம்பாஹான் மற்றும் கம்போங் லிமாவ் ஆகிய இடங்களில் உள்ள மக்களின் வீட்டுத் திட்டங்கள் (பிபிஆர்) மே 23 முதல் ஜூன் 5 வரை கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வைக்கப்படும்.
கம்போங் பத்து முடா தம்பாஹானில் 300 கொவிட் -19 பரிசோதனைகளில் 76 பேர் தொற்று கண்டிருப்பதாகவும், கம்போங் லிமாவ் பிபிஆரில் 150 பரிசோதனைகளில் 59 பேர் தொற்றுக்கு ஆளானதாகவும் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“சுகாதார அமைச்சகம் குறுகிய காலத்தில் சம்ப்வங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கண்டறிந்துள்ளது. இரு பகுதிகளிலும் மிக அதிகமான தொற்று விகிதங்கள் உள்ளன,” என்று இஸ்மாயில் கூறினார்.
“கொவிட் -19 சம்பவங்களை விரைவாகக் கண்டறிய சுகாதார அமைச்சகத்திற்கு கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை உதவும். இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்படலாம் மற்றும் நோய்த்தொற்றுகள் சமூகத்திற்கு வெளியே பரவாமல் பார்த்துக் கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.