இன்று முன்னதாக இஸ்தானா நெகாராவில் முதலமைச்சர் அபாங் ஜோஹரி ஓபெங், மாமன்னர் சுல்தான் அப்துல்லாவுடன் நடத்திய சந்திப்பிற்குப் பிறகு இந்த முடிவு வெளியிடப்பட்டது.
“கொவிட் -19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவசர கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களுடன் மாநில அரசு வழக்கம் போல் செயல்பட வேண்டும் என்று மாமன்னர் அறிவுறுத்தியுள்ளார்,” என்று இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் 6 அன்று முடிவடையும்.
Comments