Home நாடு கொவிட்-19: மோசமான சூழலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்

கொவிட்-19: மோசமான சூழலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்

617
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த நாட்டில் கொவிட் -19 தொற்று அதிவேகமான போக்கை காண்பித்து வருவதால், தற்போதைய நிலையை விட மோசமான நிலைக்குத் தயாராக வேண்டும் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

சம்பவங்களின் அதிகரிப்பு ஏப்ரல் 1 முதல் தொடங்கியது மேலும், அது தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

“மோசமானவற்றுக்கு நாம் தயாராக வேண்டும். வீட்டில் தங்குவதன் மூலம் எங்களுக்கு உதவுங்கள். நாம் ஒன்றாக இருந்தால் மட்டுமே, நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க முடியும், ” என்று அவர் இன்று தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும்படி நூர் ஹிஷாம் அறிவுறுத்தினார். நேற்று, மலேசியாவில் 6,509 புதிய கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகியிருந்தன. கடந்த 24 மணி நேரத்தில் 61 இறப்புகள் பதிவு செய்யப்பட்டன.