Home நாடு எந்தத் தடுப்பூசி? இனி நீங்களே தேர்வு செய்யலாம்!

எந்தத் தடுப்பூசி? இனி நீங்களே தேர்வு செய்யலாம்!

515
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான கொவிட்-19 தடுப்பூசி எது என்பதை இனி அவர்களாகவே தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கான வசதியை அரசாங்கம் கூடியவிரைவில் ஏற்படுத்திக் கொடுக்கும் என கொவிட்-19 தடுப்பூசிக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்திருக்கிறார்.

மை செஜாதெரா குறுஞ்செயலி மூலம் இந்தத் தேர்வை பொதுமக்கள் செய்ய முடியும் எனவும் கைரி மேலும் குறிப்பிட்டார்.

தற்போது இதுபோன்ற வசதிகளை சிங்கப்பூர் அரசாங்கம் பின்பற்றி வருகிறது. எந்தெந்த தடுப்பூசி செலுத்தும் மையங்களில் எந்தெந்த இரக தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன என்பது குறித்து முன்கூட்டியே இணையத் தளங்களில் அறிவிக்கப்படுகிறது. அதன்படி சிங்கப்பூர் மக்கள் தாங்கள் செலுத்திக் கொள்ள வேண்டிய தடுப்பூசியை அவர்களாகவே தேர்வு செய்து கொள்கிறார்கள்.

#TamilSchoolmychoice

அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சருமான கைரி ஜமாலுடின் இன்று வியாழக்கிழமை மாலை (மே 27) இயங்கலை வழி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், தடுப்பூசிகளை மக்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்ற புதிய நடைமுறைக்கானத் தகவலை வெளியிட்டார்.