Home நாடு எல்ஆர்டி விபத்து: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரதமர்

எல்ஆர்டி விபத்து: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரதமர்

392
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் எல்ஆர்டி இரயில் விபத்து போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

திங்களன்று நடந்த சம்பவம் குறித்து அரசாங்கம் தீவிரமாகக் கருதுவதாகவும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.

“20 ஆண்டுகளுக்கும் மேலாக, எல்ஆர்டி மோதல் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை, ஆனால் இது நடந்ததால், நாம் வருத்தத்தில் உள்ளோம். நாங்கள் விசாரிக்கிறோம்,” என்று அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்த பின்னர் கூறினார்.

#TamilSchoolmychoice

“மோதல் பிரச்சனை ஏற்கனவே விசாரிக்க உருவாக்கப்பட்ட சிறப்பு பணிக்குழுவின் நிலையை எட்டியுள்ளது. என்ன நடந்தது என்பதை குறுகிய காலத்தில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

“தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள் குணமடைய மற்றும் வெளியேற்றப்படுவதற்கு இன்னும் சிறிது நேரம் எடுக்கும். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்புவதோடு, தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் தொடர முடியும் என்று நான் பிரார்த்திக்கிறேன், ” என்று அவர் கூறினார்.