Home இந்தியா கொவிட்-19: இந்தியாவில் தொற்று எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது

கொவிட்-19: இந்தியாவில் தொற்று எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது

492
0
SHARE
Ad

புது டில்லி: கடந்த 24 மணி நேரத்தில் 186,364 புதிய கொவிட் -19 சம்பவங்களை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 27,555,457- ஐ எட்டியுள்ளது என்று அதன் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இறப்பு எண்ணிக்கை 318,895 பேரை எட்டியுள்ளது. கட்னத 24 மணிநேரத்தில் 3,660 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன.

முந்தைய நாள், இந்தியா 211,298 புதிய கொவிட் -19 சம்பவங்களையும், 3,847 இறப்புகளை உறுதிப்படுத்தியது.

#TamilSchoolmychoice

அமெரிக்காவிற்குப் பிறகு கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா இரண்டாவது மிக உயர்ந்த நாடாக மாறியது. 33.21 மில்லியனுக்கும் அதிகமானோர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றுவரை, உலகளவில் 168.77 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.5 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.