Home நாடு கோத்தா பாரு வாக்காளர்கள் தடுப்பூசி பெற்றால் 20 ரிங்கிட் ஊக்கத்தொகை

கோத்தா பாரு வாக்காளர்கள் தடுப்பூசி பெற்றால் 20 ரிங்கிட் ஊக்கத்தொகை

827
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான தக்கியுடின் ஹசான் தனது ஒவ்வொரு தொகுதி வாக்காளருக்கும் கொவிட் -19- க்கு எதிராக தடுப்பூசி போட 20 ரிங்கிட் ஊக்கத்தொகையை வழங்குகிறார்.

மே 30 அன்று தொடங்கும் இந்த ஊக்கத்தொகையை அவரது சேவை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

ஊக்கத்தொகை பெறுநர்கள் கோத்தா பாரு வாக்காளராக இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி போடப்பட்ட ஆதாரம் இரண்டையும் காண்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவர் தனது தொகுதிகளுக்கு தடுப்பூசி மையத்திற்குச் செல்ல இலவச போக்குவரத்து சேவையையும் வழங்குகிறார்.

கிளந்தான் தற்போது கொவிட் -19 தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாகும்.