Home நாடு கொவிட்-19: நோன்பு பெருநாள் தொற்று குழுக்கள் அதிகம்

கொவிட்-19: நோன்பு பெருநாள் தொற்று குழுக்கள் அதிகம்

459
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தொற்று குழுக்கள் குறித்து தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கவலை தெரிவித்தார். இது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைகளை மீறியதால் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து இஸ்மாயில், மொத்தம் 24 தொற்று குழுக்களை சுகாதார அமைச்சு மே 27 வரை பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.

“மாநில மற்றும் மாவட்ட இயக்கங்களை அனுமதிக்க வேண்டாம் என்று அரசாங்கம் முன்னர் அறிவுறுத்தல்களை வெளியிட்டிருந்தது. நோன்பு பெருநாள் கொண்டாட்டம் ஒரே வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடையே மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் நடைமுறைகளுக்கு கீழ்ப்படியாத தரப்புகள் இருந்தனர்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.