Home இந்தியா கொவிட்-19: தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிப்பு

கொவிட்-19: தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிப்பு

487
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதனை நீட்டிக்க முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தினசரி தொற்று 35,000-க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. மேலும், உயிரிழப்பு 400- க்கும் மேல் என்ற அளவில் பதிவாகி வருகிறது.

இதனால், தமிழக அரசு கடந்த மே 24-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அறிவித்தது.

#TamilSchoolmychoice

இப்போது அது ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.