கோலாலம்பூர்: ஜூன் 1 முதல் ஜூன் 14 வரை முழு ஊரடங்கை அமல்படுத்துவதில் மத்திய அரசைப் பின்பற்றப்போவதில்லை என்று சரவாக் முடிவு செய்துள்ளது.
அது அதன் தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஒழுங்கு நெறிமுறைகளுடன் தொடரும் என்று கூறியுள்ளது.
ஆஸ்ட்ரோ அவானிக்கு அளித்தப் பேட்டியில், மாநில சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா, சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு (எஸ்.டி.எம்.சி) நேற்று புத்ராஜெயா அறிவித்ததைத் தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் விவாதிக்கவில்லை என்று கூறினார்.
“நாங்கள் தீபகற்பத்தைப் பின்பற்றவில்லை. எல்லா பொருளாதாரத் துறைகளையும் எங்களால் மூட முடியாது,” என்று அவர் கூறினார்.