Home நாடு கொவிட்-19: 82,341 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்

கொவிட்-19: 82,341 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்

636
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் மொத்தம் 82,341 குழந்தைகள் கொவிட் -19 நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் இந்த எண்ணிக்கை 30,000- க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

இந்த மோசமான புள்ளிவிவரத்தை சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா வெளிப்படுத்தினார். மொத்தம் 19,851 சம்பவங்கள் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் தொடர்புடையவை; 8,237 சம்பவங்கள் (ஐந்து முதல் ஆறு வரை); 26,851 (ஏழு முதல் 12 வரை) மற்றும் 27,402 (13 முதல் 17 வரை), அவர்கள் 1, 2 மற்றும் 3 பிரிவுகளில் கொவிட் -19 நோயாளிகளாக உள்ளனர்.

#TamilSchoolmychoice

“தீவிர சிகிச்சைப் பிரிவில் யாரும் இல்லை,” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

மே 24- ஆம் தேதி வரை மொத்தம் 48,261 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்திருந்தார். இந்த எண்ணிக்கையில் 6,290 பேர் 18 மாதங்கள் அல்லது அதற்கு குறைவானவர்கள் என்று அவர் கூறினார்.

தங்கள் குழந்தைகளை நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாமென்றும், தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பதில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு அதிக பொறுப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.