Home நாடு கார்ல்ஸ்பெர்க் மதுபான தொழிற்சாலை அத்தியாவசிய சேவையா?

கார்ல்ஸ்பெர்க் மதுபான தொழிற்சாலை அத்தியாவசிய சேவையா?

608
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கார்ல்ஸ்பெர்க் மதுபான தொழிற்சாலை அதன் செயல்பாடுகளை நாடு தழுவிய முழு ஊரடங்கின் கீழ் செயல்பட அனுமதித்ததற்காக அமானா இளைஞர் தலைவர் ஒருவர் அரசாங்கத்தை கேள்வி எழுப்பியுள்ளார்.

கெவின் ஷான் கோம்ஸ், கார்ல்ஸ்பெர்க்கின் தயாரிப்புகள் மலேசியர்களுக்கும் முன்னணி வீரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்களாக கருதப்படுகிறதா என்று அவர் வினவியுள்ளார்.

அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கடிதம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட பின்னர், கார்ல்ஸ்பெர்க் கடுமையான நடைமுறைகளுக்கு கீழ் செயல்பட அனுமதிக்கப்பட்டதைக் காட்டுகிறது.

#TamilSchoolmychoice

கோமஸ், அமைச்சின் முடிவை விளக்குமாறு அதன் அமைச்சர் அஸ்மின் அலியைக் கேட்டுக் கொண்டார். மேலும், ஊரடங்கின் போது அத்தியாவசியமற்ற தொழில்கள் செயல்பட வழங்கப்பட்ட ஒப்புதல்களை மறுஆய்வு செய்யுமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பு மன்றம் பட்டியலிட்டுள்ள பானங்கள் துறையின் கீழ் வந்ததால், மதுபானம் செயல்பட அனுமதிக்கப்பட்டதை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.