Home நாடு வங்கிகளுக்கு கட்டளையிட அரசுக்கு அதிகாரம் இல்லை!

வங்கிகளுக்கு கட்டளையிட அரசுக்கு அதிகாரம் இல்லை!

496
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடன் தள்ளுபடி குறித்து வங்கிகளுக்கு கட்டளையிட அரசுக்கு எந்தவொரு சட்ட சக்தியும் இல்லை என்று நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் இன்று தெரிவித்தார்.

தேசிய வங்கி மற்றும் வங்கிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் விளைவாக இந்த கடன் தள்ளுபடி முடிவு வழங்கப்பட்டதாக இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெங்கு ஜாப்ருல் கூறினார்.

முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை போல, அனைவருக்கும் ஏன் தானியங்கி அடிப்படையில் கடன் தள்ளுபடி வழங்கப்படவில்லை என்று அவரிடம் கேட்கப்பட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்று அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி பி40 பிரிவினர், வேலை இழந்தவர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கானதாகும்.

“அரசாங்கம் வங்கிகளைக் கட்டுப்படுத்தாது. இது வங்கிகளின் நிலைப்பாடு. தேசிய வங்கி இந்த முயற்சியை ஒருங்கிணைத்துள்ளது, ” என்று அவர் கூறினார்.