Home நாடு கொவிட்-19 நிதி: அரசு ஊழியர்களின் பங்களிப்பிற்கு பிரதமர் நன்றி

கொவிட்-19 நிதி: அரசு ஊழியர்களின் பங்களிப்பிற்கு பிரதமர் நன்றி

549
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னணி தொழிலாளர்களின் போராட்டத்திற்கான ஆதரவின் பிரதிபலிப்பாக, அரசு ஊழியர்கள் தங்களது கொடுப்பனவுகளிலிருந்து பங்களிப்பது குறித்து பிரதமர் மொகிதின் யாசின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கத்துடன் பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் அரசு ஊழியர்களின் ஒற்றுமையை இது நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.

“இந்த கொவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்ள ஒரு வருடத்திற்கும் மேலாக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் எல்லையற்ற நன்றி,” என்று அவர் புதன்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.