Home வணிகம்/தொழில் நுட்பம் மைசெஜாதெரா: கொவிட் தடுப்பூசி பதிவு செய்யும் அம்சம் கர்ப்பிணிகளுக்கு அறிமுகம்

மைசெஜாதெரா: கொவிட் தடுப்பூசி பதிவு செய்யும் அம்சம் கர்ப்பிணிகளுக்கு அறிமுகம்

573
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கொவிட் -19 தடுப்பூசி சந்திப்புக்கு பதிவுசெய்யும் அம்சம் மைசெஜாதெரா செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது.

இது சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின்படி பரிந்துரைக்கப்பட்ட கொவிட் -19 தடுப்பூசிகளைப் பெற அவர்களுக்கு உதவும்.

“உங்கள் மைசெஜாதெரா சந்திப்பு பக்கத்தில், நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் அம்மாவாக இருந்தால் இப்போது புதுப்பிக்கலாம். தயவுசெய்து உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவிக்கவும்,” என்று செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ இன்று முகநூலில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த செவ்வாயன்று இந்த புதிய அம்சத்தை அறிவிக்கும் நிகழ்ச்சியில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடினும், பெண்கள் தடுப்பூசி போடலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் முன் தங்கள் மருத்துவர்களை அணுகுமாறு அறிவுறுத்தினார்.