Home நாடு விமானங்கள் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டன- சீன தூதரகம் அறிக்கை

விமானங்கள் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டன- சீன தூதரகம் அறிக்கை

394
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய வான்வெளியில் சந்தேகத்திற்கு இடமாக 16 சீன இராணுவ விமானங்களை மலேசிய விமானப்படை தடுத்து நிறுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், அவ்விமானங்கள் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டன என்று கூறினார்.

“எனக்குத் தெரிந்தவரை, அறிவிக்கப்பட்ட செயல்பாடு வழக்கமான சீன விமானப்படை விமானப் பயிற்சிகள் மற்றும் எந்த நாட்டையும் குறிவைக்கவில்லை.

“அனைத்துலக சட்டத்தின்படி, சீன இராணுவ விமானங்கள் சம்பந்தப்பட்ட வான்வெளியில் பறக்க அனுமதி உண்டு. இந்த பயிற்சியின் போது, ​​சீன இராணுவ விமானம் பொருந்தக்கூடிய அனைத்துலக சட்டத்திற்கு இணங்கியது. பிற நாடுகளின் வான்வெளியில் நுழையவில்லை,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

#TamilSchoolmychoice

சீனாவும் மலேசியாவும் நட்பு அண்டை நாடுகள் என்றும், வட்டார அமைதி மற்றும் நிலைத்தன்மையை கூட்டாகப் பராமரிக்க மலேசியாவுடன் இருதரப்பு நட்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர சீனா தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, இது குறித்து சீன தூதரகம் விளக்கம் அளிக்கக் கோரி வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் ஓன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.